October 2020

மே தினம் – புத்தக விமர்சனம்

புத்தகம் : மே தினம் ஆசிரியர் : அறிஞர் அண்ணா வெளியீடு : தென்றல் டிஜிட்டல் புக்ஸ் (மின் நூலாக்கம் ) அறிஞர் அண்ணாவின் சிந்தனைகளாக மே தினம் , போர் முரசு மற்றும் வீரர் வழிவந்த இனம் என்ற மூன்று தலைப்புகளின் தொகுதியே இந்த புத்தகம் . வாசிக்கும் போது ஓரளவுக்கு யூகித்து விட முடியும் இவை யாவும் அண்ணாவின் மேடை பேச்சுகள் என்று . இவை யாவும் அண்ணா தி.க வில் இருந்த காலகட்டத்தில் […]

மே தினம் – புத்தக விமர்சனம் Read More »

மனப்பத்தாயம் – புத்தக விமர்சனம்

புத்தகம் : மனப்பத்தாயம் ஆசிரியர் : யுகபாரதி வெளியீடு : நேர்நிரை பதிப்பகம் பொதுவாகவே நம்மில் பல வாசிப்பாளர்களுக்கு கவிதை புத்தகங்கள் என்றாலே கொஞ்சம் அல்லர்ஜி தான் . சில கவிதை புத்தகங்கள் படிக்கவே மிகவும் கடினமான வார்த்தைகளுடன் புரியாத கோணத்தில் இருப்பது போல் இருக்கும், அது போன்ற புத்தகங்களை பார்த்தால் அவை நமக்காய் எழுதப்பட்டதில்லை என்று அந்த புத்தகங்களை தள்ளிவிடலாமே தவிர ஒட்டுமொத்தமாக கவிதை புத்தகங்களையே தவிர்ப்பது சரியா என்ன? உண்மையில் கவிதைகள் தரும் அழகியலை,

மனப்பத்தாயம் – புத்தக விமர்சனம் Read More »

தலித்துகளும் நிலமும் – பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு – புத்தக விமர்சனம்

புத்தகம் : தலித்துகளும் நிலமும் – பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு ஆசிரியர் : ரவிக்குமார் வெளியீடு : அமேசான் கிண்டல் மின்நூல் தலித் மக்களுக்கு பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு தான் இந்த புத்தகத்தின் மைய புள்ளியாக இருந்தாலும் நிலம் சார்ந்த சாதிய அரசியலை அழுத்தமாய் பேசியிருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் ரவிக்குமார் . முன்னதாக தரவுகளின் மூலம் தலித் மக்களின் மக்கள் தொகையையும் அவர்கள் வைத்திருக்கும் நிலங்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு , அது மாநில வாரியாக

தலித்துகளும் நிலமும் – பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு – புத்தக விமர்சனம் Read More »

அடியாள் – புத்தக விமர்சனம்

புத்தகம் : அடியாள் (ஓர் அரசியல் அடியாளின் வாக்குமூலம்) ஆசிரியர் : ஜோதி நரசிம்மன் வெளியீடு : கிழக்கு பதிப்பகம் நம்மில் நிறைய பேர் அனுபவ பிரியர்களாக இருக்கலாம் காட்டுக்குள் பயணம் , மலை ஏறுதல் , உயரத்தில் இருந்து கயிறு கட்டி குதித்தல் போல புதிது புதிதான அனுபவங்களை தேடுபவர்களாக இருக்கலாம் , ஆனால் அப்படி பட்டவர்கள் கூட சிறை அனுபவம் எப்படி இருக்கும் என்ற துளி சிந்தனைக்குள் கூட சென்றிருக்க மாட்டார்கள் . சிறைச்சாலை

அடியாள் – புத்தக விமர்சனம் Read More »

ஒரு விசாவுக்காக காத்திருத்தல் – புத்தக விமர்சனம்

புத்தகம் : ஒரு விசாவுக்காக காத்திருத்தல் ஆசிரியர் : டாக்டர் .B .R . அம்பேத்கர் வெளியீடு : மக்கள் கல்வி கழகம் தொகுத்து வெளியிட்ட நூல் சாதிய ஏற்ற தாழ்வுகள் மற்றும் அதனால் பாதிக்கப்படும் மக்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளை விவரிப்பதை இரண்டு விதமாக சொல்லலாம் ஒன்று பொதுவாக விளக்கம் கொடுப்பது மற்றொன்று நடந்த சம்பவங்களை எடுத்து கூறி புரியவைப்பது . இதில் இரண்டாவது வகையை சேர்ந்ததே இந்த புத்தகம் . இந்த புத்தகத்தில் டாக்டர் அம்பேத்கர்

ஒரு விசாவுக்காக காத்திருத்தல் – புத்தக விமர்சனம் Read More »

ஊழல் – உளவு – அரசியல் – புத்தக விமர்சனம்

புத்தகம் : ஊழல் – உளவு – அரசியல் ஆசிரியர் : சவுக்கு சங்கர் வெளியீடு : கிழக்கு பதிப்பகம் மேலோட்டமாக அரசு எந்திரம் , அதிகாரிகள் , அரசியல்வாதிகள் எப்படி என்று ஓரளவுக்கு யூகிக்க முடியும் ஆனால் நமக்கு தெரியாத பல திரைமறைவு செயல்பாடுகள் பற்றி இந்த புத்தகத்தில் படித்தறியும் போது கொஞ்சம் பதற தான் வைக்கிறது. அரசியல் பற்றிய ஆர்வமுள்ளவர்கள் சவுக்கு சங்கர் பற்றி அநேகமாக அறிந்திருக்க கூடும் . லஞ்ச ஒழிப்பு துறையில்

ஊழல் – உளவு – அரசியல் – புத்தக விமர்சனம் Read More »

வேடிக்கை பார்ப்பவன் – புத்தக விமர்சனம்

புத்தகம் : வேடிக்கை பார்ப்பவன் ஆசிரியர் : நா.முத்துக்குமார் வெளியீடு : விகடன் வெளியீடு கவிஞர் நா.முத்துக்குமார் தன் வாழ்க்கை அனுபவங்களை விகடனில் தொடராக எழுதி அதை தொகுத்து புத்தகமா விகடன் குழுமமே வெளியிட்டுள்ளார்கள் . வாழ்க்கை அனுபவங்களுக்குள்ளாக சுவாரஸ்யங்களை ஒளித்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கட்டவிழ்க்கும் நா.முத்துக்குமாரின் விவரணைகளே தனி அழகியல் தான் . பொதுவாகவே நா முத்துக்குமாரின் வரிகள் எளிய சொற்களை தாங்கிய அழகியலை செதுக்கி கொண்டே இருக்கும் , அவருடைய கவிதைகள் அனைத்தும்

வேடிக்கை பார்ப்பவன் – புத்தக விமர்சனம் Read More »

பாரதி நேற்று – இன்று – நாளை – புத்தக விமர்சனம்

புத்தகம் : பாரதி நேற்று – இன்று – நாளை ஆசிரியர் : வலம்புரி ஜான் வெளியீடு : நெய்தல் வெளி பாரதி என்ற முற்போக்காளன் எவ்வாறாக வாழ்ந்தான் , வாழ்கிறான் எப்படி வாழ போகிறான் என்பதை மூன்று அத்தியாயங்களாக விவரிக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் . பாரதிக்கு பிடித்தவர் பிடிக்காதவர் என்று பாகுபாடெல்லாம் கிடையாது எதிர் கருத்துடையவர்களின் நற்காரியங்களையும் புகழ்ந்து பாடுபவன் , அவனை பொறுத்தவரை நற்சிந்தனைகளை விதைக்க வேண்டுமே தவிர எதிர் கருத்துடையோர் என்பதற்காக அவர்களின்

பாரதி நேற்று – இன்று – நாளை – புத்தக விமர்சனம் Read More »

வணிகமும் வாழ்வும் – புத்தக விமர்சனம்

புத்தகம் : வணிகமும் வாழ்வும் ஆசிரியர் : G.S.விஜயவர்மன் வெளியீடு : அமேசான் கிண்டில் (Amazon Kindle) வணிகமும் வாழ்வும் என்றவுடன் பொருளாதார கோட்பாடுகளை உள்ளடக்கிய கனமான கருத்துக்கள் கொண்ட புத்தகமாக இருக்கும் என்று எண்ண வேண்டாம். நம் அன்றாட வாழ்வில் நமக்கு தெரியாமலேயே நம்மை ஏமாற்றும் வணிக நுட்பங்கள் பற்றியும் அதனுடன் கலந்த நம் வாழ்வியலையும் எடுத்துக்கூறும் புத்தகம் இது. காட்சி விற்பனை முறையில் நாம் எப்படி தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிக்கிறோம் , அதை

வணிகமும் வாழ்வும் – புத்தக விமர்சனம் Read More »

அணையாத ஜோதிபாசு – புத்தக விமர்சனம்

புத்தகம் : அணையாத ஜோதிபாசு ஆசிரியர் : என்.ராமகிருஷ்ணன் வெளியீடு : கிழக்கு பதிப்பகம் தொடர்ந்து ஐந்து முறை மேற்கு வங்கத்தின் முதல்வராக இருந்த ஜோதி பாசுவின் வரலாறு தான் இந்த புத்தகம். அவர் சொந்த வாழ்க்கையை பெரியதாக பதிவு செய்யவில்லை என்றாலும் அவருடைய பொது வாழ்க்கையை வைத்து அவருடைய பண்பை கண்டிப்பாக கணித்துவிட முடியும் . கம்யூனிச தலைவரான ஜோதிபாசு இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவர் . பிரிட்டிஷ் இந்தியாவில் தொடங்கி சுதந்திர

அணையாத ஜோதிபாசு – புத்தக விமர்சனம் Read More »