Article

இறங்குமுகம் | கவிதை

உப்பு காய்த்த உடம்பும் உருகிய தோற்றமும் அழுக்கு துணியும் அலுத்துப்போன முகமும் அநேகமாக அனைத்து சாராய கடைக்கு முன்பும் யாரோ ஒருவனுக்கு பொருந்தி போகிறது நாள் முழுவதும் சுண்டிய வியர்வையின் ஆன்மா சாராய பாட்டிலில் அடக்கம் செய்யப்பட வலியின் மருந்தாக எடுக்கப்பட்ட பானம் வாழ்க்கையில் நோயாக தொற்றிக் கொள்கிறது அப்பாவாக, கணவனாக, அண்ணனாக, தோழனாக ஆணுக்கு தான் எத்தனை பட்டங்கள் அனைத்து பட்டங்களும் பிடுங்க பட்டு ஒரே ராத்திரியில் அநாதையாக குடியேறுகிறான் குடிகாரன் என்ற வெளிச்சமற்ற விலாசத்தில் […]

இறங்குமுகம் | கவிதை Read More »

பிறந்தநாளன்று காணாமல் போவது

“முன்பு ஒருமுறை நண்பன் வீம்புக்காக செய்ததை நான் ஒருநாள் விரும்பி செய்ய துணிந்தேன் பிறந்தநாளன்று காணாமல் போவது அனைத்து நாளையும் போலவே கடந்துவிட்டால் பிறந்த நாளுக்கென்று என்ன மதிப்பு தொலைபேசி அணைத்து , மின் கருவிகளை துறந்து நானென்ற அடையாளமான நானாக வாகனமற்று , தொலைதூரம் நடந்து அவசியமில்லாத பேருந்து பயணம் செய்து முடிந்த அளவு ஈகை செய்து மீதி நேரம் முழுக்க புடித்த புத்தகத்தில் மூழ்கிக் கிடந்து சாதாரண செயல்களால் அந்த ஒருநாளை விசேஷமாக மாற்றிக்

பிறந்தநாளன்று காணாமல் போவது Read More »

பங்குச் சந்தை என்னும் மாயை – ஒரு புரிதல் கட்டுரை

பங்கு சந்தை என்றவுடன் ஒரு சாமானிய மனிதனின் கருத்தாக இருப்பது அது ஒரு சூதாட்டம், கொடுக்கிற மாதிரி கொடுத்து எடுத்துக்கொள்வார்கள் என்பது போலவும் அதற்கு வலுசேர்ப்பார் போல் பங்கு சந்தை நஷ்டத்தால் ஒருவர் தற்கொலை , குடும்பத்துடன் தற்கொலை போன்ற செய்திகளையும் சாட்சியாக எடுத்து வைக்கக் கூடும் . அவர்கள் நினைப்பது போல் நஷ்டம் கண்டிப்பாக நிகழ கூடும் , அதே சரி சதவிகிதம் லாபத்திற்கும் வழிகள் உண்டு. முதலில் பங்கு சந்தை என்றால் என்னவென்று சொல்கிறேன்

பங்குச் சந்தை என்னும் மாயை – ஒரு புரிதல் கட்டுரை Read More »

பட்ஜெட் விளக்கமும் – ஹல்வா ரகசியமும்

வருகின்ற பிப் 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள். செய்தித்தாள்கள் , தொலைக்காட்சி செய்திகள் சமூக ஊடகங்கள் என்று பலஇடங்களில் இந்த செய்தியை நீங்கள் பார்த்திருக்க கூடும் . சிறு குறு தொழிற்முனைவோர்களிலிருந்து பெரிய தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், பங்கு சந்தை தரகர்கள், பொருளாதார நிபுணர்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பதாக சொல்கிறார்கள். அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மத்திய பட்ஜெட்டில், விரிவாக

பட்ஜெட் விளக்கமும் – ஹல்வா ரகசியமும் Read More »

நலத்திட்ட உதவிகளும் வரி வருவாயும்

வருடங்கள் கடக்க கடக்க வரிகளும் ஏறி கொண்டே போகிறது. அதற்கு நேரடி தொடர்புள்ள விலைவாசியும் வேகமெடுத்துக்கொண்டே போகிறது . அடி மற்றும் நடுத்தர மக்கள் கொஞ்சம் மேல எழுவதற்குள் அடுத்தடுத்த குண்டுகளாக வரி மழை பொழிந்து கொண்டே இருக்கிறது . விலைவாசி உயர்வும் , கடன் சுமையும் கீழிருப்பவரை கீழேயே அமிழ்தி வைத்திருக்கிறது. இந்த பிரச்சனையின் வேரை தேடி சென்றால் அதற்கு பல கிளைகள் இருக்கலாம் , அதையெல்லாம் ஆராய்வதற்கும் சீர்திருத்துவதற்கும் பல வருடங்கள் பிடிக்கும். அதை

நலத்திட்ட உதவிகளும் வரி வருவாயும் Read More »

கார்ப்பரேட் என்றால் கெட்ட வார்த்தையா ?

கொஞ்சம் காலமாகவே தமிழகத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் பற்றிய பிம்பம் மிகவும் அபாயகரமாக கட்டமைக்கப்படுகிறது. எந்த அளவுக்கு என்றால் , கிராமப்புறத்தில் தோராயமாக ஒருவரை கூப்பிட்டு கார்ப்பரேட் என்றால் என்னவென்று கேட்டு பாருங்கள் , கிராமங்களையும் விவசாயத்தையும் அழிப்பதற்கென்றே படித்து , வேலைக்கு போய் , முதலாளி ஆகி வில்லன்களாக உருவாகியதை போல் ஒரு பெரிய விளக்கமே உங்களுக்கு கிடைக்க கூடும் . கார்ப்பரேட் கம்பெனிகள் தவறானவர்கள் என்றே வைத்து கொள்வோம் . கார்ப்பரேட் என்பது ஒரு நிர்வாக

கார்ப்பரேட் என்றால் கெட்ட வார்த்தையா ? Read More »

தமிழ் தேசியமா ? திராவிடமா ? இந்திய தேசியமா ?

தமிழக அரசியல் பெரும்பாலும் இந்த மூன்று கோஷங்களில் அடங்கி விடும் (தமிழ் தேசியம் , திராவிடம் , இந்திய தேசியம் ) . சாதிய அரசியலை கையில் எடுப்போரின் பின்புலத்தை ஆராய்ந்தால் கூட அவர்களும் இந்த மூன்று கோஷங்களில் அடங்கி விடுவார்கள். எது நியாயமானது என்று எடுத்து ஆராய ஆரம்பித்தால் , வீண் வாதங்கள் வளருமே தவிர தீர்வை நோக்கி செல்ல முடியாது . தீர்வுகளை சொல்லாமல் நியாயமான வாதங்களை மட்டும் உங்கள் பார்வைக்கு எடுத்து வைக்கிறேன்

தமிழ் தேசியமா ? திராவிடமா ? இந்திய தேசியமா ? Read More »