மே தினம் – புத்தக விமர்சனம்

புத்தகம் : மே தினம்

ஆசிரியர் : அறிஞர் அண்ணா

வெளியீடு : தென்றல் டிஜிட்டல் புக்ஸ் (மின் நூலாக்கம் )

அறிஞர் அண்ணாவின் சிந்தனைகளாக மே தினம் , போர் முரசு மற்றும் வீரர் வழிவந்த இனம் என்ற மூன்று தலைப்புகளின் தொகுதியே இந்த புத்தகம் . வாசிக்கும் போது ஓரளவுக்கு யூகித்து விட முடியும் இவை யாவும் அண்ணாவின் மேடை பேச்சுகள் என்று . இவை யாவும் அண்ணா தி.க வில் இருந்த காலகட்டத்தில் பேசியவை.

மே தினம் என்ற கட்டுரையில் தொழிலாளர் தினம் நாம் ஏன் கொண்டாட வேண்டும், மே தினத்தின் வரலாறு என நிறைய சுவாரஸ்யமான பேச்சுகளை வீச்சுகிறார் அண்ணா. கம்யூனிஸ்டுகளை மிகவும் வெளிப்படையாகவே சாடியிருக்கும் அண்ணா , அவர்கள் இருக்கும் எந்திரத்துக்கு எதிராக போராடி கொண்டிருக்கிறார்களே தவிர அந்த எந்திரத்தை எப்படி மாற்றுவது என்ற எண்ணம் சிறிதும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று கூறுகிறார். பிறகு ஓரிடத்தில் பணக்காரர்களுக்கும் முதலாளிகளுக்குமான வித்யாசத்தை கூறி அதுகூட தெரியாமல் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்று விவரிக்கும் இடங்களெல்லாம் பங்கம்.

பழமை வாதம் , தேசியம் என்று கூறி காங்கிரஸ் எப்படி எல்லாம் நாட்டை பாழடித்து கொண்டிருக்கிறது என்பதை ஆங்காங்கே விவரிக்கும் அண்ணா , முதலாளிகளுக்காக பேசுகிறார் என்று காந்தியையும் கூட ஓரிடத்தில் சாடும் விவரணைகளெல்லாம் உள்ளது .

முழுக்க முழுக்க திராவிடம் பற்றிய சிந்தனைகளை அள்ளி தெளிக்கும் தொகுப்பு , கூடவே ஆரியம் ஏன் நம் எதிரி என்பதற்கான பல்வேறு நடைமுறை எடுத்துக்காட்டுகளை எடுத்துவைக்கிறார் அறிஞர் அண்ணா . மத துவேஷம் என்பதை விட மதத்தின் பெயரால் வளங்களை எப்படி ஒரே பக்கம் தேக்கி வைக்கிறார்கள், அதை வேறு எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று ஆதங்கங்களை தெரிவிக்கிறார் அண்ணா.

பிறகு திராவிட நாடு கொள்கையின் சாரம்சங்கள் நிறையவே பேசியிருக்கிறார் அண்ணா . ஏன் தனி திராவிடநாடு வேண்டும் , அப்படி திராவிட நாடு உருவாகினால் யாரெல்லாம் இருக்கமுடியும் , என்ன சட்டங்களெல்லாம் இருக்கும் . வடநாட்டவர் எப்படி நம்மை நசுக்குகின்றனர் போன்ற நிறைய விஷயங்களை பேசி இருக்கிறார் அறிஞர் அண்ணா .

இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற சில விஷயங்களும் , இன்றைய சூழ்நிலைக்கு எதிரான நிறைய விஷயங்களும் கூடியிருக்கும் தொகுப்பு இது . உதாரணத்துக்கு வடநாட்டவர் அதிகாரம் , நாட்டிற்கான சில பொருளாதார சிந்தனைகள் இன்றைய சூழ்நிலைக்கு தேவையான ஒன்று. தேவையற்றது என்று சொல்ல முடியாது எடுபடாத விஷயங்கள் என்றால் திராவிடநாடு கொள்கை, அண்ணா சொன்ன அதே காரணங்கள் கம்யூனிஸ்ட்களிடமும், காங்கிரஸ் இடமும் அப்படியே தான் இன்றும் உள்ளது அதை பற்றி யாரும் பேசப்போவது இல்லை.

வரலாற்று அரசியல் வாசிப்புகளில் ஆர்வமுள்ளவர்கள் வாசிப்பதற்கு சரியான புத்தகம்.

குறிப்பு: ஆரியர்கள் படிக்க வேண்டாம் , மனம் புண்பட நேரிடும்.

புத்தகம் வாங்க : மே தினம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *