முல்லை பெரியாறு – புத்தக விமர்சனம்

புத்தகம் : முல்லை பெரியாறு

ஆசிரியர் : ஊரோடி வீரகுமார்

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

முல்லை பெரியாறு அணை அவ்வளவு எளிதாய் கட்டப்பட்டவை அல்ல , காடுகளுக்குள் அலைந்து மலைகளை குடைந்து கைதேர்ந்த கட்டிட பணியாளர்கள் இல்லாத காலகட்டத்தில் வந்து வந்து காணாமல் போன நூற்றுக்கணக்கான பணியாளர்களை ஒழுங்கு படுத்தி இயந்திரங்களை வரவழைத்து அதற்கான தனி திட்டங்கள் தீட்டி பல வருடங்கள் கடந்து கட்டஆரம்பித்த அணையின் அடித்தளம் காற்றாற்று வெள்ளத்தில் அடித்து போக இரண்டாம் முறை அணையின் கட்டிட வேலைகளை ஆரம்பிக்க ஆங்கிலேய அரசு மறுத்து விட்டது .

ஆனால் பஞ்சத்தில் வாடும் மக்களின் வாழ்க்கை இந்த அணை கட்டி தண்ணீரை கொண்டு வந்தால் கண்டிப்பாக மாறும் என்பதை ஆழமாய் நம்பிய பென்னி குவிக் அந்த அணை கட்டுவதை தன் வேலை என்பதிலிருந்து தனது கனவாக நினைக்க ஆரம்பித்தார் அதனாலேயே தன் சொத்துக்களை விற்று அந்த அணையை கட்டிமுடிக்க மனம் வந்தது அவருக்கு .

தன்னை அடிமை படுத்தவந்த ஆங்கிலேயரில் ஒருவனான பென்னி குவிக் யின் பெயரை இன்றும் தேனி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள் என்றால் அவர் செய்த காரியம் அவ்வளவு அளப்பரியது . இவை அனைத்தும் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது .

அணையை பென்னி குவிக் கட்டிய நோக்கமே வேறு , ஆனால் அந்த நோக்கத்திலிருந்து வேறு தடத்தில் பயணித்து கொண்டிருக்கிறது அந்த அணைக்கான அரசியல் . அணைக்கு பின்னாடி இருக்கும் அரசியல் , அந்த அணை எந்த மாநிலத்துக்கு மிகவும் தேவையான ஒன்று , அணைக்கு பின் இருக்கும் சர்ச்சைகள் , அந்த சர்ச்சைகளை கலைக்க ஆசிரியர் முன் வைத்த அறிவியல் பூர்வ அத்தாட்சிகள் , அனைத்தும் ஆரோகியபூர்வமாக இந்த புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது .

இந்த புத்தகத்தில் வேலையாட்களுக்கு கொடுத்த சம்பள விவரங்கள் முதல் நிறைய தகவல்கள் , புள்ளி விவரங்கள் பகிரப்பட்டுள்ளது . இந்த புத்தகம் கண்டிப்பாக முல்லை பெரியாறு மற்றும் அணைகள் பத்தின நல்ல புரிதலை ஏற்படுத்தும்

புத்தகம் வாங்க : முல்லை பெரியாறு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *