முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் ? – புத்தக விமர்சனம்

புத்தகம் : முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் ?

ஆசிரியர் : சந்திரா உதயகுமார்

வெளியீடு : நாளந்தா பதிப்பகம்

நான் மிகவும் ஆர்வப்பட்டு வாங்கிய புத்தகங்களில் ஒன்று . பொதுவாகவே நமது தமிழர் வாழ்வியல் இயற்கையை சார்ந்தே இருந்து வந்துள்ளது . ஆரோகியமான வாழ்வியலையே முன்னெடுத்து வந்திருக்கிறோம் . உண்ணும் உண்ணவிலிருந்து , சடங்கு , சம்பிரதாய முறைகள் வரை இந்த பார்வையே பிரதிபலிக்கிறது. மேலோட்டமாக இது அனைவரும் அறிந்தது தான்.

இருந்தாலும் உலக பார்வைக்கு இது பத்தாது , அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் மட்டுமே மேல் சொன்ன வாதங்கள் சபையில் நிற்கும். மஞ்சள் , வேப்பிலை , மாயிலை போக ஒரு பத்து பொருட்கள் இருக்கலாம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க. ஆனால் இன்று வரை நம் வாழ்வியல் நலன்களை அறிவியல் பூர்வமாக விளக்கிய விரிவான கட்டுரைகளையோ புத்தகங்களையோ நான் பார்த்ததில்லை.

அந்த ஆவலின் பேரிலேயே இந்த புத்தகத்தை வாங்கினேன். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இந்த புத்தகத்தை உருவாக்காமல் இருந்திருந்தாலே அது தமிழ் நிலப்பரப்புக்கு செய்த தொண்டாக இருந்திருக்கும். நூற்றில் 20% விஷயங்களுக்கு கூட அறிவியல் பூர்வமான வாதங்களையோ விளக்கங்களையோ எடுத்து வைக்கவில்லை.

இப்படி செய்தால் இது நடக்கும் , அப்படி செய்தால் அது நடக்கும் என்று சொல்கிறார்களே தவிர அதற்கான காரணங்கள் முழுமையாக இல்லை. பலரால் அறியப்பட்ட சில விஷயங்கள் மட்டுமே இந்த புத்தகத்தில் உறுப்பிடியான விஷயம்.

இதுமாதிரியான புத்தகங்கள் தான் நம் வாழ்வியலை காட்டுமிராண்டிகள் போலவும் , நமது பழக்கவழக்கங்களை மூடநம்பிக்கையாகவும் சித்தரிக்கிறது. நமது வாழ்வியல் , பழக்கவழக்கங்கள் பற்றிய விரிவான ஆய்வு நூல் இதற்கு முன்னாடி இருந்திருந்தால் சந்தோசம் , இல்லை என்றால் விரைவில் அதுபோன்று ஒரு நல்ல புத்தகம் படைக்கப்பட வேண்டும் என்ற அவாவோடு நிறைவு செய்கிறேன்.

நன்றி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *