பங்குச் சந்தை என்னும் மாயை – ஒரு புரிதல் கட்டுரை

பங்கு சந்தை என்றவுடன் ஒரு சாமானிய மனிதனின் கருத்தாக இருப்பது அது ஒரு சூதாட்டம், கொடுக்கிற மாதிரி கொடுத்து எடுத்துக்கொள்வார்கள் என்பது போலவும் அதற்கு வலுசேர்ப்பார் போல் பங்கு சந்தை நஷ்டத்தால் ஒருவர் தற்கொலை , குடும்பத்துடன் தற்கொலை போன்ற செய்திகளையும் சாட்சியாக எடுத்து வைக்கக் கூடும் . அவர்கள் நினைப்பது போல் நஷ்டம் கண்டிப்பாக நிகழ கூடும் , அதே சரி சதவிகிதம் லாபத்திற்கும் வழிகள் உண்டு. முதலில் பங்கு சந்தை என்றால் என்னவென்று சொல்கிறேன் பிறகு அதிலுள்ள லாப நஷ்ட காரணிகள் மற்றும் எவ்வாறு அணுகினால் நல்லது என்பதை பார்ப்போம்.

பொதுப்படையாக மக்கள் நினைப்பது போல் பந்தயம் வைத்து சூதாடுவதல்ல பங்கு சந்தை என்பது. சூதாட்டத்தில் வெற்றி தோல்வி என்பது முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை பொறுத்தது . ஆனால் நிஜ பங்குச் சந்தையின் வடிவமும் , செயல்முறையும் வேறு இது முழுக்க முழுக்க தொழிற்முதலீடு சார்ந்தது. எடுத்துக் காட்டுடன் இதை விளக்க விரும்புகிறேன். ஒருவர் ஒரு சிறிய தினசரி செய்தித்தாள் , வார இதழ்கள் விற்பனை செய்யும் தொழிலை ஆரம்பிக்க நினைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அவருக்கு பெரியதாக முதலீடு தேவைப்படாது தன்னுடைய சேமிப்புகள் , நகைகளை வைத்துக் கூட தொழில் தொடங்கலாம் பிரச்சனை இல்லை.

இரண்டாவது நபர் ஒருவர் நடுத்தர புத்தகக்கடை அல்லது சூப்பர்மார்கெட் வைக்க வேண்டும் என்று நினைக்கிறார் ஆனால் அவருக்கு தினசரி செய்தித்தாள் விற்கும் தொழில் போல் அல்லாது ஒரு கணிசமான முதலீடு தேவைப்படும், அவருடைய கையிருப்பையும் தாண்டி முதலீட்டு தேவைகள் இருக்கலாம். அப்படி இருக்கும்பட்சத்தில் ஒரு 4 அல்லது 5 நண்பர்களிடமோ உறவினரிடமோ முதலீடாக பணத்தைப் பெற்று தொழில் தொடங்கிவிட முடியும்

மூன்றாவது நபர் ஒருவர் ஒரு பெரிய பஞ்சாலையோ , இரும்பு உருக்கு ஆலையோ , அல்லது கார் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்க நினைக்கிறார் அவருக்கு தோராயமாக ஒரு 100 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. நடைமுறையில் இவ்வளவு பெரிய முதலீட்டை சேமிப்பு, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து பெற்று தொழில் தொடங்குவது என்பது நடைமுறை சாத்தியமற்றது. பின்பு இவர் எப்படி முதலீட்டுக்கான பணத்தை பெறுவார்?. இவர் போன்ற பெரிய முதலீடு தேவைப்படுவோர்கள் எல்லாம் பங்குசந்தையில் தான் பணத்தை திரட்டுவார்கள்.

பங்குச் சந்தை எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். இந்தியாவில் பிரபலமாக இரண்டு பங்குச்சந்தைகள் இருக்கின்றன ஒன்று தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றொன்று மும்பை பங்குச் சந்தை (BSE). இந்த பங்குச் சந்தைகளை நிர்வகிப்பது , கண்காணிப்பது SEBI(Securities and Exchange Board of India) எனப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் பெரிய முதலீடு தேவைப்படும் நபரோ, நபர்களோ தங்கள் தொழிற் சம்மந்த அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு SEBI யின் நடைமுறைகளை பின்பற்றி பங்குச் சந்தையில் இணைவார்கள். பங்குசந்தையில் வர்த்தகம் செய்யும் லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு இந்த 100 கோடிக்கு நிகரான பங்குகளாக பிரித்து விற்கப்படும்

ஆதாவது தேவைப்படும் 100 கோடியை பங்குகளாக பிரித்து ஒரு பங்கின் விலை இவ்வளவு என்று நிர்ணயம் செய்து விற்பார்கள். எடுத்துக்காட்டாக தேவைப்படும் 100 கோடி ரூபாயை 10 கோடி பங்குகளாக பிரித்து ஒரு பங்கின் விலை 10 ரூபாய் என்று நிர்ணயித்தால் பங்குகளை விற்று பணத்தை திரட்டிவிடமுடியும். பின்பு தொழிற்சாலை நல்ல லாபத்தில் வளரும் பட்சத்தில் நிறைய பேர் போட்டிபோட்டுக் கொண்டு அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க முற்படும்போது தேவை அதிகம் இருப்பதின் காரணமாக பங்குகளை அதிக விலைக்கு வாங்க தயாராகி விலையுயர்த்தி கேட்டு கேட்டு வாங்க வாங்க அந்த பங்குகளின் விலை உயரும். இது இன்னும் பல காரணிகளால் ஏறவும் இறங்கவும் வாய்ப்புகள் உள்ளது ஆழமாக பங்குச் சந்தை பற்றி படிக்க ஆரம்பிக்கும் பொழுது அவை புரியும்

இவ்வாறு பங்குச் சந்தையில் இறக்கத்தில் இருக்கும் நல்லப் பங்குகளை வாங்கி அவை ஏறும்பொழுது பங்குகளை விற்று லாபம் பார்க்கிறார்கள். இங்கு தான் விஷயமே, நல்ல பங்கு எது என்பதை எப்படி கணிப்பது அல்லது கணக்கிடுவது? இது தான் வித்தை இதை கற்றவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் , கணிக்க தெரியாமல் எல்லோரும் போடுகிறார்கள் என்று போட்டவர்களுக்கு பணம் திரும்பி கிடைக்கும் என்பது நிஜமாகவே சூதாட்டம் மாதிரி அதிர்ஷ்டத்தை பொறுத்தது தான்.பங்கு சந்தை அல்லது குறிப்பிட்ட பங்குகளின் ஏற்ற இறக்கத்தை கணிக்க நிறைய வழிமுறைகள் உள்ளது. அது சார்ந்த பகுப்பாய்வில் ஈடுபடுவதும், தொடர்ந்து அது சார்ந்த விஷயங்களை கண்காணிப்பதும் மிகவும் அவசியம்.

கண்டிப்பாக பங்குச்சந்தை வர்த்தகத்தை வருமானம் தரும் உபத் தொழிலாக எண்ணிவிட வேண்டாம். உங்கள் திறமையை பொறுத்ததே நீங்கள் தோற்றவர்களில் ஒருவரா ? அல்லது சம்பாதித்தவர்களில் ஒருவரா ? என்பது தீர்மானம் ஆகும். உங்களுக்கு திறமை இல்லை ஆனால் பணம் இருக்கிறது , அல்லது நேரம் இல்லை என்றால் என்னால் முதலீடு செய்யமுடியாதா என்று கேட்டால். கண்டிப்பாக முடியும் , நீங்கள் வைத்திருக்கும் பணத்தை ஒரு தேர்ந்த நிதி மேலாளரிடம் கொடுத்தால் அவர் அதை சரியாக முதலீடு செய்து லாபம் ஈட்டு கொடுப்பார் அதற்கு நீங்கள் அவர்களுக்கு ஒரு சிறிய சேவை கட்டணம் செலுத்த வேண்டி வரும். இந்த முதலீட்டு முறையின் பெயர் தான் Mutual Funds (பரஸ்பர நிதி) முதலீடு. பங்குச் சந்தை சாராத கடன் பாத்திரங்களில் மட்டும் முதலீடு செய்து லாபம் ஈட்டி தரும் பரஸ்பர நிதிகளும் உண்டு போகப்போக விளக்குகிறேன்.

பங்குசந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் Demat எனப்படும் பங்குகளை சேமிக்கும் கணக்கு தொடங்க வேண்டும். பணத்தை சேர்த்துவைக்க வங்கி கணக்கு இருப்பது போல. பல Upstox போன்ற பங்குச்சந்தை தரகர்கள் மூலம் இந்த கணக்குகளை இணையத்தின் மூலமாகவே தொடங்க முடியும். இந்த தளத்திலேயே பரஸ்பர நிதிகளிலும் (Mutual Funds), தங்கத்திலும் (Digital Gold) கூட முதலீடு செய்ய முடியும்.

பங்குசந்தையில் முதலீடு செய்ய விரும்பினால் தேவையான விஷயங்களை தெரிந்துக் கொண்டு முதலீடு செய்யுங்கள் முக்கியமாக யார் பேச்சையும் கேட்டு முதலீடு செய்யாதீர்கள் அப்படி கேட்டாலும் இறுதி முடிவு நீங்கள் தீர்க்கமாக விஷயங்களை தெரிந்துக் கொண்டு , பகுப்பாய்வு செய்த பின் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கட்டும். நீங்கள் உழைத்து சேர்த்தப் பணம் மேலும் சேருவதற்கும் குறைவதற்கும் நீங்கள் ஒருவரே பொறுப்பு.

டீமேட் கணக்கை தொடங்கி (Demat Account) பங்குச்சந்தை(Stock Market) , பரஸ்பர நிதி (Mutual Funds) , மற்றும் தங்கத்தில் (e-gold) முதலீடு செய்ய விரும்பினால் கீழே உள்ள படத்தை சொடுக்கி கணக்கை தொடங்கி முதலீட்டை ஆரம்பிக்கலாம்.

பொறுப்பு துறப்பு:

பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி சம்மந்தமான முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. நான் மேல் கூறிய யாவும் நான் படித்து அறிந்த விஷயங்கள் மட்டுமே. நான் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் கிடையாது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *