வாடிவாசல் – புத்தக விமர்சனம்

புத்தகம் : வாடிவாசல்

ஆசிரியர் : சி சு செல்லப்பா

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வாடிவாசல் ஐம்பதுகளில் எழுதப்பட்ட குறுநாவல். ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதைக்களம். ஜல்லிக்கட்டு வெறும் விளையாட்டல்ல , அதிலுள்ள சூட்சமங்கள் கெளரவம், வீரம், ரோஷம் ஆகிய அனைத்தையும் கதையின் போக்கில் ஆங்காங்கே காணலாம் . தமிழுக்கே உரித்தான அழகு அதிலுள்ள வட்டார பாஷைகள் தான் . இந்த நாவல் முழுவதும் தென் தமிழக வட்டார பாஷை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவே அந்த வட்டார வழக்குகள் பரிச்சயம் இல்லாதவர்கள் கொஞ்சம் நிதானமாய் வாசித்து வார்த்தைகள் தவிர்க்காமல் படிப்பது அவசியம்.

போகிற போக்கில் பேசி அறிமுகமாகி , சில மணிநேரங்களில் பழகி நினைவில் நிற்கும் கதாபாத்திரங்கள் அந்த வட்டார மக்களின் இயற்கை சுபாவத்தை அப்படியே விவரித்திருக்கிறது. வந்த திசையை வைத்து இவன் இன்னார் , இவன் செய்கைகள் இப்படி இருக்கும் என்று இயல்பாய் பேசிப்போவதெல்லாம் கிராமத்தார்க்கே உரிய பரந்த அறிவு.

திரைப்படம் பார்க்கும் அளவுக்கு காளையை அடக்கும் காட்சிகளை நொடிக்கு நொடி விவரித்திருக்கிறார் செல்லப்பா , கதையின் ஸ்வாரஸ்யத்திற்கு இதுவும் முக்கிய காரணம் . சல்லியில் நிற்கும் வீரனும் , காளையும் கிட்டத்தட்ட ஒரே மனநிலையில் தான் இருப்பார்கள் இரண்டுக்குமே ரோஷம் வந்தால் எப்படி களியாட்டம் நடத்துவார்கள் என்பதற்கு முழுக்கைத்தையும் உதாரணம் .

ஒரு பக்கம் சல்லி வீரன் , இன்னொரு பக்கம் காளையை வளர்த்த ஜமீன்தார் . இருவருக்கும் காளை தான் கௌரவம் . யார் கெளரவம் வென்றது என்பதை முடிச்சி போட்டு கதையை கொண்டு சென்றிருப்பார் ஆசிரியர் .

இந்த நாவலை மையமாக வைத்து வெற்றிமாறன் வாடிவாசல் என்ற பெயரிலேயே திரைப்படம் இயக்குகிறார் என்று கேள்வி பட்டேன் . வாசிப்பில் இருந்த ஸ்வாரஸியம் இன்னும் அதிகமாக கிடைக்கக்கூடும் என்பதால் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் .

புத்தகம் வாங்க : வாடிவாசல்

மின் நூலுக்கு : வாடிவாசல் மின் நூல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *