வந்தார்கள் வென்றார்கள் – புத்தக விமர்சனம்

புத்தகம் : வந்தார்கள் வென்றார்கள்

ஆசிரியர் : கார்ட்டூனிஸ்ட் மதன்

பதிப்பகம் : விகடன் பிரசுரம்

கி.பி 10 ஆம் நூற்றாண்டில் கஜினி முகமது முதல் ஆங்கிலேயர்களால் பர்மாவிற்கு நாடு கடத்தப்பட்ட கடைசி முகலாய மன்னன் பகதூர் ஷா வரையிலான இந்தியாவை ஆண்ட அனைத்து முகலாய மன்னர்கள் பற்றிய வரலாற்று புத்தகம் தான் இந்த வந்தார்கள் வென்றார்கள் . கஜினி முஹம்மது , கோரி முஹம்மது , குதுப் உதின் ஐபக் , பல்பன் , ரசியா என பலர் இந்தியா மீது படையெடுத்தாலும் அங்கொன்று இங்கொன்றுமாக கோட்டைகளை கைப்பற்றினாலும் நீண்ட நெடிய முகலாய சாம்ராஜ்யம் பாபர் அவரிடமிருந்தே தொடங்குகிறது.

பாபருக்கு பிறகு ஹுமாயுன் , அக்பர் , ஜஹாங்கீர் , ஷாஜஹான் , அவுரங்கஜீப் வரை நிலையான முகலாய சாம்ராஜ்யம் வடக்கே இமயம் முதல் தெற்கே கோதாவரி நதி வரை நீள , அவுரங்கஜீப்புக்கு பிறகு சரிய தொடங்கிய முகலாய சாம்ராஜ்யம் கடைசியாக பகதூர் ஷா காலத்தில் முடிவு பெற்றது. அநேகமாக நான் படித்த வரலாற்று புத்தகங்களில் மிகவும் சுவாரஸ்யமானது இந்த புத்தகம் தான். சுவாரஸ்யமான எளிய நடையில் எழுதியுள்ளார் மதன் அவர்கள்.

மங்கோலிய வழிவந்த முகலாயர்கள் இந்தியாவை கிட்டத்தட்ட 700 கும் மேற்பட்ட ஆண்டுகள் மிகப்பெரிய சாம்ராஜ்யம் அமைத்து கட்டி ஆண்டார்கள் என்றால் சும்மாவா ? . ஆண்டது மட்டும் அல்ல இன்றைய இந்தியாவிற்கு முன்னோடியும் அவர்களே , ஆக்கத்திற்கும் சரி அழிவிற்கும் சரி அவர்களே பெரிய காரணம். இந்த வரலாற்றில் தைமூர் போன்ற மூர்கர்களும் உண்டு , ஷெர் ஷா சூரி போன்ற சிறந்த கட்டமைப்பை உருவாக்கியவர்களும் உண்டு , ஜஹாங்கீர் ஷாஜஹான் போன்று கலைகளை வளர்த்தவர்களும் உண்டு , அக்பர் போன்ற மதசார்பற்ற தலைவனும் உண்டு , அவுரங்கஜீப் போன்று வெறிகொண்டு சீரழித்த அரசர்களும் உண்டு.

ஷெர் ஷா சூரி போன்ற அருமையான அரசாங்க கட்டமைப்பை உருவாக்கிய முகலாயர்கள் காலத்தில் தான் இந்தியாவில் இருந்த பெரும்பாலான செல்வங்கள் பல படையெடுப்புகள் மூலம் சூறையாட பட்டது , பல லட்சம் மக்கள் கொலை செய்ய பட்டனர். முகலாயர்களை எதிர்த்து போரிட்ட குழுக்கள் என்று பார்த்தால் முதன்மையானவர்கள் ராஜபுத்திரர்கள் , பிறகு சீக்கியர்கள் , ஜாட் இனத்தினர் , மராட்டியர்கள் என சிங்கங்களாய் சீறி பாய்ந்தனர்.

அவுரங்கஜீபுக்கு பிறகு சரிய தொடங்கிய முகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு உதவி செய்த பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்திய கம்பெனி பிறகு மொத்த இந்தியாவையும் விழுங்கியது வேறு வரலாறு. இந்த புத்தகத்தை தொடங்கும்போதே மதன் கூறி விடுகிறார் வரலாறு என்று வரும்போது அதற்கு பல version கள் இருக்கலாம் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட version யை மட்டும் தொகுத்து கூறுகிறேன் என்று.

எனவே இந்த புத்தகத்தில் உள்ள வரலாறு ஒரு version மட்டுமே , சுவாரஸ்யமான version னும் கூட. விருப்பம் இருந்தால் வாங்கி வாசியுங்கள் . வரலாற்றை அறிவது மிகவும் முக்கியம் அமைச்சரே…!!

புத்தகம் வாங்க : வந்தார்கள் வென்றார்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *